Tuesday, July 13, 2010

கடைசி வாய்ப்பு - 02 - எஸ். கே

நடுநிசி.

ஜான் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜான்.
தன் இளமைக்காலங்களை வீணாக்கிய ஒரு இளைஞன். சிறு சிறு திருட்டுகளை செய்துவந்தவன். தனக்கென்று யாரும் இல்லாததாலோ என்னவோ மனம்போன போக்கில் வாழ்ந்து கொண்டிருந்தான்.

அவன் வாழ்க்கை ஒரு நாளில் மாறுமென அவனுக்கு அன்று  தெரிந்திருக்கவில்லை.



அன்று....

வழக்கம்போல் பஸ்ஸில் ஏறினான். அன்றைய இலக்கு நான்கு பர்ஸ்கள்.

முதலில் யாருடையதை எடுக்கலாம்?

ஒருவர் வெள்ளை உடையில் பின்பக்கமாக நின்று கொண்டிருந்தார். வெள்ளை அவனுக்கு பிடித்த நிறம். அழுக்கில்லாத நிறம்.

அவரின் பர்ஸை அவருக்கு தெரியாமல் எடுத்தான்.

நகர்ந்தபோது ஒருவர் சத்தம்போட்டார், “திருடன், திருடன் அவன் பிக்பாக்கெட் அடிச்சிட்டான் பாருங்க”.

ஜானுக்கு இதுபோல் பலமுறை ஆகியுள்ளது. சிலமுறை மாட்டிக்கொண்டும் இருக்கிறான். போலீசிலும் பிடிபட்டிருக்கிறான்.

அதனால் எப்படி தப்பிப்பது என யோசிக்கும்போது இரண்டுபேர் அவனை நன்றாக பிடித்துக் கொண்டனர். ”ஏய், தப்பிச்சு போலாம்னு பாத்தியா!” என அடிக்க தொடங்கும்போது....

”நிறுத்துங்க”

ஜான் அவரை பார்த்தான், அவருடைய பர்சைதானே திருடினோம் அவர் ஏன் நிறுத்த சொல்றார் என புரியாமல் அவர் முகத்தை பார்த்தான். அவரின் கண்கள் பிரகாசமாக ஏதோ ஒருவித காந்த சக்தியோடு இருப்பதுபோல் அவனுக்கு தோன்றியது இமைக்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர் சில நொடிகள் அவனைப் பார்த்து விட்டு, ”ஓ! தம்பி நீயா! எல்லாரும் விடுங்க இவன் எனக்கு தெரிஞ்ச பையன்தான். எப்பவுமே இப்படிதான் எதையாவது எடுத்து வெச்சுக்கிட்டு விளையாடுவான்” அவர் மெலிதான் புன்னகையோடு பேசினார்.

அனைவரும் அரைமனதோடு கலைந்து சென்றனர்.

ஜான் அவர் ஏன் தன்னை காப்பாற்றினார் என புரியாமல் விழித்தான். அவர் ஒரு நிறுத்தத்தில் இறங்கினார். அவனிடம் கண்ணசைத்தார். அவனும் இறங்கினான்.

”பேரென்ன” என்றார்.

”ஜா..ஜான்” என்றான் தடுமாற்றமாக.

அவர் மெலிதாக புன்னகைத்தார். அந்த புன்னகையே அவனை வசீகரித்தது.
அவரை பார்த்தால் கம்பீரமாக பெரிய இடத்து ஆள் போலத்தான் இருந்தார்.

”என்னோடு வருகிறாயா”

”....”
அவன் மவுனமாக தலையசைத்தான். அவர் மீண்டும் புன்னகைத்தார்.

2 comments:

  1. //Madhavan said...
    Waiting for the next part.. interesting.//
    நன்றி!

    ReplyDelete