Thursday, July 8, 2010

மனம்+ : முக்கியத்துவம்

“என்னங்க நீங்க என்னை முன்ன மாதிரி கவனிக்கிறதே இல்லை” - மனைவி(சில சமயங்களில் கணவன் கூட மனைவியிடம் இப்படி கொ(கெ)ஞ்சுவது உண்டு)

“வேலை செய்யறத விட்டுட்ட மத்ததெல்லாம் செய்யுங்க” - முதலாளி.

“கல்யாணம் ஆனா பிரண்ட்ஸ் எல்லாரையும் மறந்துவீங்களே” - நண்பர்கள்.

“எங்களையெல்லாம் ஞாபகம் வைச்சுப்பீங்களா” என கிண்டல் செய்யும் உறவினர்கள்.

வாழ்க்கையில் அனைவரும் மற்றவர்கள் தங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என விரும்புகின்றனர். அதுபோலவே நாமும் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்கள், மனிதர்கள் இவர்களிடம் முக்கியத்துவம் காண்பிப்பதில் பாரபட்சம் காட்டுகிறோம்.

ஆம்! சிலர் எப்போதும் வேலை வேலை என ஓடிக் கொண்டிருப்பார்கள். சிலர் பணம் எதன் மூலம் வரும் என வழிகள் தேடி பணத்தை சேர்ப்பதிலேயே குறியாய் இருப்பார்கள்.
சிலருக்கு நண்பர்களே உலகம்.

இப்படி மனிதர்களின் குணங்களும் அவர்களின் முக்கியத்துவம் காட்டும் முறைகளும் மாறுபடுகின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றைய உலகில் இன்றியமையாதவை இவைகள் தான்

1. குடும்பம்
2. நட்பு
3. உறவினர்கள்
4.வேலை
5.பணம்
6.காதல்/காமம்(செக்ஸ்)

இவற்றை சுற்றியே மனிதன் வாழ்கிறான்.

சரி! நீங்கள் எதற்கு முக்கியத்துவம் அளிப்பவர்?
ஒரு சோதனையை பார்ப்போமா?

நீங்கள் வீட்டில் இருக்கிறீர்கள்... அப்போது...

1. குழந்தை அழுதுகொண்டிருக்கின்றது
2. வெளியே மழைபெய்கிறது துணிகள் வெளியே காய்ந்துகொண்டிருக்கின்றன.
3. தொலைபேசி அடித்துக் கொண்டிருக்கின்றது
4. குழாயில் நீர் வேகமாக ஒழுகி கொண்டிருக்கின்றது.
5. வெளியே காலிங்பெல்லை யாரோ அடிக்கிறார்கள்.

நீங்கள் எதை முதலில் கவனிப்பீர்கள்?

உங்கள் பதிலை வரிசைப்படுத்துங்கள்.


குழந்தை - உங்கள் குடும்பத்தை குறிக்கின்றது

வெளியே சென்று யார் காலிங்பெல் அடித்தார்கள் என பார்ப்பது- நண்பர்கள்/உறவினர்களை குறிக்கிறது
போனை எடுப்பது - வேலை மற்றும் தொழிலை குறிக்கிறது

குழாயில் ஒழுகும் நீரை மூடுவது - செல்வம்/பணம் இவற்றை குறிக்கிறது.

மழையில் நனையாமல் கொடியில் உள்ள துணிகளை எடுக்க செல்வது - காதல்/காமம்(செக்ஸ்) இவற்றை குறிக்கிறது.

இப்படி நீங்கள் எதை முதலில் பின் இரண்டாவது எதை கவனிப்பீர்கள் என சொன்னதை வைத்து

  • குடும்பம்
  • நட்பு/உறவினர்கள்
  • வேலை/தொழில்
  • பணம்/செல்வம்
  • காதல்/காமம்(செக்ஸ்)
இவற்றில் எதற்கு அதிக முக்கியத்துவத்தை நீங்கள் அளிக்கிறீர்கள் என அறிந்துகொள்ளலாம்.



டைம்பாஸ்


7 comments:

  1. அன்பின் சுரேஷ் குமார்

    மனம் - நல்லதொரு இடுகை - ஒரே நேரத்தில் பல வேலைகள் வரும்போது எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதனைக் கொண்டு நம்மைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் - சிந்தனை வருமாறு சிந்திப்பது நன்று. டைம் பாஸ் சூப்பர் சுரேஷ்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  2. நல்ல விசயங்களை தொடக்கத்திலேயே எடுத்து எழுத ஆரம்பித்த உங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ஹேய் என்னொட ஃபேவரிட் சப்ஜெக்ட்..

    நெறைய எழுதுங்க...
    வாழ்துக்கள்...எஸ்.கே...

    ReplyDelete
  4. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  5. பதிவும், மனம் சம்பந்தப் பட்ட விசயங்களும் அருமை.

    ஆனால் அந்த படம், விளையாட்டு தான் ரயில் நிலையத்தில் உள்ள எடை காட்டும் எந்திரம் போல இருக்கிறது

    ReplyDelete
  6. //ராம்ஜி_யாஹூ said... //
    :-)

    ReplyDelete