Saturday, July 31, 2010

அடோப் ஃபிளாஷ் (5) - Button

முதலில் ஒரு புதிய பிளாஷ் பைலை திறக்கவும்.
உங்களுக்கு தேவையான வடிவத்தை வரையவும்.


வடிவத்தை ரைட் கிளிக் செய்து Convert to Symbol என்பதை கிளிக் செய்து அதில் Button என்பதை தேர்ந்தெடுக்கவும்.


இப்போது வடிவத்தை ஏரோ டூலை பயன்படுத்தி டபுள் கிளிக் செய்யவும்.
இப்போது டைம்லைன் இருக்கும் இடத்தில் இப்படி இருக்கும்.

இதில் up என்பது மவுஸ் பட்டன் மேல் இல்லாமல் இருப்பது. Over என்பது மவுஸ் பட்டன் மீது இருப்பது. Down என்பது மவுஸ் பட்டனை அழுத்திக் கொண்டு இருப்பது. Hit என்பது கிளிக் செய்த பின் இருப்பது.

ஒவ்வொன்றிற்கு நீங்கள் விருப்பப்பட்டபடி நிறம் கொடுக்கலாம்.
ஒவ்வொன்றையும் கிளிக் செய்து Insert Keyframe என்பதை கிளிக் செய்த பின், வடிவத்திற்கு வேண்டிய நிறத்தை அளியுங்கள்.

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.

இதை  சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

Demo: 

1 comment:

  1. விளக்கம் நன்றாக இருக்கிறது..இப்பதான் முதல்ல இருந்து படிக்கிறேன்

    ReplyDelete