Monday, August 16, 2010

அடோப் ஃபிளாஷ் (23) - Blur Transition effect

இந்த எஃபக்ட்டிற்கும் ஒரு மங்கலான படம் ஒரு தெளிவான படம் தேவை. மங்கலான படத்தை எப்படி உருவாக்குவது என்று முந்தைய ஃபிளாஷ் பதிவில் சொல்லியிருக்கிறேன்.

முதலில் File->Import->Import to Library என்பதை கிளிக் செய்து இரண்டு படங்களையும் இம்பொர்ட் செய்து கொள்ளுங்கள்.

பிறகு Insert->New Symbolஐ கிளிக் செய்யவும். Name என்பதற்கு MAIN எனவும் Type என்பதற்கு Movie Typeஐயும் தேர்ந்தெடுக்கவும்.

இரண்டு லேயர்களை உருவாக்கவும். முதல் லேயரில் மங்கலான படத்தையும் இரண்டாவது லேயரில் தெளிவான படத்தையும் வைக்கவும்.



தெளிவான படத்தை ரைட்கிளிக் செய்து convert to symbolஐ கிளிக் செய்து Movie Typeஐயும் தேர்ந்தெடுக்கவும். அதன் Instance Name என்பதில் clearpic என்பதை கொடுக்கவும்.

பிறகு Scene 1 என்பதை கிளிக் செய்யவும். ஸ்டேஜுக்கு MAIN என்பதை இழுத்து விடவும்.


படத்தை ரைட்கிளிக் செய்து Actionsஐ கிளிக் செய்து கீழ்காணும் ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.

onClipEvent(load)
 {
 dir = 0;
 speed = 30;
 clearpic._alpha = 0
 this.onRollOver = function()
 {
 dir = 1;
 }

 this.onRollOut = function()
 {
 dir = -1;
 }
 useHandCursor = false;
 }
 onClipEvent(enterFrame)
 {
 temp = clearpic._alpha + speed*dir;
 clearpic._alpha = Math.min(100,Math.max(temp,0));
 }
நீல நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்டுள்ள இடத்தில் நாம் தெளிவான படத்திற்கு கொடுத்த Instance Name வர வேண்டும். வெள்ளை நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்டுள்ள இடத்தில் blur-ன் வேகத்தை இடலாம். மஞ்சள் நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்டுள்ள இடத்தில் தெளிவான படத்தின் தெளிவின்மை அளவை இடலாம்.(0 என்பது முழுமையான தெளிவு).


இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.


DEMO:





8 comments:

  1. இந்தத் தொடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...ஒரு ஏழெட்டு வருசத்துக்கு முன்னாடி..நான் ஃபிளாஷ் ஒர்க் பண்ண ஆரம்பிச்ச புதுசுல...இதுக்கான விளக்கம் தமிழ்ல இருந்தா..எவ்வளோ நல்லா இருக்கும், நிறைய பேர் கத்துக்குவாங்களேன்னு நினைச்சிருக்கேன்...அதை நீங்க இப்ப நடைமுறை படுத்திட்டு வர்ரீங்க...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //ரமேஷ் said... //
    மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  3. //ஜீ... said... //
    Thanks for visiting and sharing your thoughts

    ReplyDelete
  4. இன்று தான் தங்கள் தளம் முதல் முதல் பார்க்கிறேன் நல்ல தகவல்கள். இதைப்பற்றி நண்பரிடம் கட்டாயம் சொல்லணும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. //ம.தி.சுதா said... //
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  6. தொடர்ந்து உபயோகமான தகவலாக் கொடுக்கறீங்க.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. //பதிவுலகில் பாபு said... //
    நன்றிங்க!

    ReplyDelete