Thursday, August 19, 2010

அடோப் ஃபிளாஷ் (26) - sparkling effect

முதலில் பிளாஷ் பைலை திறந்து கொள்ளுங்கள்.

இது ஒரு பெரிய எஃபக்ட் இதற்கு முதலில் மூன்று முக்கிய மூவி கிளிப்கள் தேவை.

1. மூவி கிளிப் 1: ஸ்டார் 1

Insert-> New Symbolஐ கிளிக் செய்யவும். அதன் Nameல் Star1 எனவும் Typeல் Movie Clipஐயும் தேர்ந்தெடுக்கவும். பிறகு பாலிகான் டூலை கிளிக் செய்யவும், கீழே பிராப்பர்டி சேனலில் options என்பதை கிளிக் செய்து styleக்கு star என்பதையும் No of sides என்பதற்கு 4ஐயும் Star Point sizeல் 0.10 எனவும் கொடுக்கவும். இப்போது ஒரு ஸ்டாரை வரையவும். (அளவு 36 X 36 எனஇருந்தால் நல்லது)



அதை ரைட் கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். அதன் Nameல் Star1a எனவும் Typeல் Movie Clipஐயும் தேர்ந்தெடுக்கவும். பிறகு 25ஆவது பிரேமில் ரைட்கிளிக் செய்து ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். 1லிருந்து 25வது பிரேமுக்குள் ரைட்கிளிக் செய்து create motion tween என்பதை கிளிக் செய்யவும்.


மீண்டும் முதல் பிரேமில் கிளிக் செய்து ஸ்டாரை கிளிக் செய்த பிறகு Modify-> Transform -> Rotate 90 CW என மூன்று முறை கிளிக் செய்யவும். பிறகு 25வது பிரேமில் கிளிக் செய்து ஸ்டாரை கிளிக் செய்த பிறகு பிராப்பர்ட்டி பேனலில் Color என்பதில் Alphaவை தேர்ந்தெடுத்து 0% கொடுக்கவும்.

2. மூவி கிளிப் 2: ஸ்டார் 2

Insert-> New Symbolஐ கிளிக் செய்யவும். அதன் Nameல் Star2 எனவும் Typeல் Movie Clipஐயும் தேர்ந்தெடுக்கவும். பிறகு பாலிகான் டூலை கிளிக் செய்யவும், கீழே பிராப்பர்டி சேனலில்
options என்பதை கிளிக் செய்து styleக்கு star என்பதையும் No of sides என்பதற்கு 4ஐயும் Star Point sizeல் 0.10 எனவும் கொடுக்கவும். இப்போது ஒரு ஸ்டாரை வரையவும். அளவு 23 X 23
என இருக்க வேண்டும். அதை ரைட் கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். அதன் Nameல் Star2a எனவும் Typeல் Movie Clipஐயும் தேர்ந்தெடுக்கவும்.


பிறகு 20 மற்றும் 40வது பிரேமில் கீபிரேமை இன்சர்ட் செய்யவும். கீபிரேம்களுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create motion tween என்பதை கிளிக் செய்யவும். பிறகு 20வது பிரேமில் கிளிக் செய்துவிட்டு ஸ்டாரை கிளிக் செய்து அதன் அளவை 9 X 9 ஆக மாற்றவும்.

3. மூவி கிளிப் 3: வட்டம்

Insert-> New Symbolஐ கிளிக் செய்யவும். அதன் Nameல் circle1 எனவும் Typeல் Movie Clipஐயும் தேர்ந்தெடுக்கவும். பிறகு ஓவல் டூல் மூலம் ஒரு வட்டத்தை வரையவும். அதன் அளவு  2 X 2 ஆக இருக்க வேண்டும். இது மிகச் சிறிய வட்டமாக இருக்கும். அதை ரைட் கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். அதன் Nameல் circle1a எனவும் Typeல் Movie Clipஐயும் தேர்ந்தெடுக்கவும்.


பிற்கு 5 மற்றும் 10வது பிரேமில் கீபிரேமை இன்சர்ட் செய்யவும். 25வது பிரேமில் ரைட்கிளிக் செய்து insert frameஐ கிளிக் செய்யவும். எல்லாவற்றிற்கும் இடையிலும் ரைட்கிளிக் செய்து create motion tween என்பதை கிளிக் செய்யவும். பிற்கு 5வது பிரேமில் கிளிக் செய்து வட்டத்தின் அளவை 14.3 X 14.3 ஆக மாற்றவும். மேலும் பிராப்பர்ட்டி பேனலில் Color என்பதில் Alphaவை தேர்ந்தெடுத்து 10% கொடுக்கவும். அதேபோல் 10வது பிரேமை கிளிக் செய்து வட்டத்தை கிளிக் செய்து பிராப்பர்ட்டி பேனலில் Color என்பதில் Alphaவை தேர்ந்தெடுத்து 5% கொடுக்கவும்.




இப்போது நம்மிடம் ஆறு மூவி கிளிப்கள் இருக்கும். அதில் நமக்கு தேவையானவை star1, star2, circle1 ஆகியவை ஆகும். இது மூன்றையும் இணைத்து ஒரே மூவிகிளிப்பாக மாற்ற போகிறோம்.

Insert-> New Symbolஐ கிளிக் செய்யவும். அதன் Nameல் sparkling எனவும் Typeல் Movie Clipஐயும் தேர்ந்தெடுக்கவும். பிறகு ஒன்றன் மேல் ஒன்றாக star1, star2, circle1 மூன்றையும் வைக்கவும். இந்த sparklingதான் நமக்கு தேவையான மூவி.


இப்போது scene1 என்பதை கிளிக் செய்து ஸ்டேஜுக்கு வாருங்கள். உங்களுக்கு தேவையான படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். sparkling மூவியை தேவையான இடத்தில் லைப்ரரியிலிருந்து இழுத்து விடவும். அவ்வளவுதான்!

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO:






No comments:

Post a Comment