Thursday, August 26, 2010

ஆக்சன்ஸ்கிரிப்ட் - 3

ActionScript ஒரு ஸ்கிரிப்ட் மொழி என்பதால், அதனால் ஒரு வேரியபிளின் மதிப்பை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவமாகவோ அல்லது ஒரு வேரியபிளை ஒரு மதிப்பிலிருந்து மற்றிரு வகையாகவோ மாற்ற முடியும். அதாவது உதாரணமாக, ஒரு string மதிப்பை numeric மதிப்பாக மாற்றி எழுத முடியும்.

fav_color = "purple";
fav_color = 1;



இந்த தன்மை நமக்கு அடிக்கடி உதவும். நாம் வேரியபிள்களின் தவறான வகையை தேர்ந்தெடுத்து விட்டால் அதனை பிறகு எளிதாக மாற்ற முடியும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு வேரியபிளுக்கு மதிப்பை தந்து விட்டீர்கள், ஆனால் பிறகு அதனுடன் மதிப்பை சேர்க்க நினைத்தால் பிளாஷ் இரண்டு மதிப்புகளையும் இணைத்துக் கொள்ளும்.

Strict Data Typing: இது ActionScript 2.0ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் நீங்கள் டிக்ளேர் செய்த ஒரு வேரியபிளிற்கு தவறான மதிப்பை தந்தால் "Type Mismatch" என செய்தி வரும். ஒரு வேரியபிளை டிக்ளேர் செய்யும்போது, அதை normal என டிக்ளேர் செய்த பிறகு ஒரு முக்காற்புள்ளி மற்றும் datatypeஐ வேரியபிளின் பெயருக்கு பின் போட வேண்டும். மேலும் var செயல்பாட்டை தொடக்கத்தில் போட வேண்டும்.

var fav_color:String = "purple";

இது fav_color என அழைக்கப்படும் ஒரு வேரியபிள் String மதிப்புகளை மட்டுமே கொண்டிருக்கும் என அறிவிக்கிறது.

Strict Typing என்பது function return வகைகள் மற்றும் arguments ஆகியவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது:

function doSomething(word:String):Number {
}

இது ஒரு function ஒரு argumentஐ செய்து ஒரு a Numberக்கு திரும்ப வேண்டும் என குறிக்கிறது.

இறுதியாக, Strict Data Typingஐ பயன்படுத்தும்போது ஒரு  variable அல்லது functionஐ custom datatypeகலோடு இணைக்கலாம். ஆனால் ஃபிளாஷின் built-in வகைகளில் எந்த கட்டுப்பாடும் இல்லை.

No comments:

Post a Comment