Wednesday, August 11, 2010

அடோப் ஃபிளாஷ் (15)- stop, play, pause பட்டன்கள்

நாம் ஒரு மூவியை உருவாக்கினால் அது ஓடிக் கொண்டே இருக்கும், சில சமயம் நாம் ஒரு மூவி ஒரு தடவை மட்டுமே ஓட வேண்டும் பின் நின்று விட வேண்டும் என நினைக்கலாம். அப்போது மூவி ஒரு தடவை ஓடிய பின் எப்படி நிறுத்துவது?

மேலே காண்பது போல ஒரு மூவி இது ஓடிக் கொண்டே இருக்கும். ஆனால் இதை நிறுத்த வேண்டும். அதற்கு நீங்கள் உருவாக்கிய மூவியில் ஏதாவது ஒரு லேயரின் கடைசி பிரேமில் ரைட் கிளிக் செய்து Actions என்பதை கிளிக் செய்து கிடைக்கும் பெட்டியில் கீழ்காணும் ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும். அவ்வளவுதான்.


stop ();



சரி இதை மீண்டும் ஓட்டி பார்க்க வேண்டும். அதற்கு ஒரு ப்ளே பட்டன் தேவையல்லவா?
அதை உருவாக்க:
Insert->Create symbolஐ கிளிக் செய்யவும். அதில் Button என்பதை தேர்ந்தெடுக்கவும்.
உங்களுக்கு தேவையான வடிவம் அல்லது எழுத்து அல்லது படத்தை இன்சர்ட் செய்யவும்.


பிறகு மீண்டும் scene1 என்பதை கிளிக் செய்யவும். பிறகு புதியலேயரை உருவாக்கி லைப்ரரிலிருந்து பட்டனை ஸ்டேஜுக்கு இழுத்து விடவும்.


பிறகு பட்டனை ரைட் கிளிக் செய்து Actions என்பதை கிளிக் செய்து கிடைக்கும் பெட்டியில் கீழ்காணும் ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.
    on (press) {
    play();
    }
இப்போது மூவியை பாருங்கள்.

[மீண்டும் என்பதை கிளிக் செய்யவும்]

ஸ்டாப் செய்ய பட்டனை உருவாக்கினால்
அதற்கான ஸ்கிரிப்ட் இதுவாகும்.
    on (press) {
    stop();
    }

பாஸ் பட்டன் செய்ய வேண்டும் என்றால் அதாவது ஒரே பட்டனை நிறுத்தவும் ப்ளே செய்யவும் பயன்படுத்த வேண்டுமானால் கீழ்காணும் ஸ்கிரிப்டை Action பாக்ஸில் பேஸ்ட் செய்யவும்.
on(release){
    if(isPlaying == undefined){
         isPlaying = false;  // use false if your timeline animation is stopped initially
    } else {
         isPlaying = !isPlaying;
    }
    if(isPlaying){
         stop();
    } else {
         play();
    }
}


DEMO:

1 comment:

  1. பஸ் லாரி சூப்பரா இருக்கு...தமிழ் எழுத்துக்கள் என்.ஹெச்.எம் ரைட்டர் போன்றவை உபயோகித்து இந்த சாஃப்ட்வேரில் எழுத முடியுமா

    ReplyDelete